Jeya Nadesan

கவிதை நேரம்-29.02.2024
இலக்கம்-1827
இப்போதெல்லாம்
——————-
கால நிலை மாற்றம் பெறுகுது
கோடை காலம் எதிர்பார்த்து நிற்குது
வெப்பம் சூடு கொஞ்சம் பெருகுது
மக்கள் நடமாட்டம் அதிகரிப்பு கூடுது
நாமும் வெளியில் செல்ல உதவியாகுது
குளிர் உடுப்புக்கள் மூலைக்குள் முடங்குது
கோடை உடுப்புக்கள் கடைகள் நிறையுது
விலைகள் எல்லாம் எக்க சக்கமாக உயருதுஉ
மக்கள் கூட்டம் கடைகள் ஏறி இறங்குது
இயற்கை மாற்றம் பெற்று மரம் துளிர்க்குது
பறவைகள் இடம் மாறி நாடுகளில் தங்குது
விலங்கினம் வெளியே நடமாட்டம் பெருகுது
இப்போதெல்லாம் தவக்காலம் நடக்குது
கிறிஸ்தவர் உபவாசம் ஒறுத்தல் பெருகுது
திருமணம் களியாட்டங்கள் அற்று போகுது
கோயில்கள் மூத்தோரால் நிரம்பி வழியுது
இளையோர் பக்தி முயற்சிகள் சற்று குறையுது
இப்போதெல்லாம் நினைத்த இடம் சென்று வர
இயற்கை எமக்கு ஒத்துழைப்பு தருகுது

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் நாடகம்... முத்தமிழின் கூட்டுக்கலை முழுநீள அழகுக்கலை வரலாற்றுப் பேரெடும் வந்திணைத்த கதைகூறும் இசையோடு இயலும் இணைந்தாகும்...

    Continue reading