சங்கதிகேளு 607

சங்கதிகேளு

வண்டியின் ஓட்டம் வேகமாய் செல்ல
சக்கரத்தின் ஆட்டம் வழுக்கியே போக
இளையவர்கள் கூட்டம் பாதியிலே கவிழ
இழுபறிப் பட்டு நிலத்திலே முடியுது

இடிபோல செய்தி அதிகாலை வந்திட
இரவு தூக்கம் இல்லாது போக
இளவல் நிலை தலைதூக்கி நிற்க
இதயமும் பயத்தால் பதட்டமாய் அடிக்க

நாயும் குறுக்கே தெரிவிலே பாய
சேயும் பிறேக்கை இறுக்கவே பிடிக்க
தேய்து இழுத்து மரத்துடன் மோத
வாயும் முகமும் குருதியில் நனைய

வண்டியும் கீறல் வேகமும் மீறல்
தாயும் சீறல் தட்டிக்கேட்டா மோதல்
கையிலே கட்டு வேணுமாம் நோட்டு
கட்டுப்பாடு இல்லா கரணம் போடுதே

Nada Mohan
Author: Nada Mohan

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் _ 217 "உறைபனி" பூம்பனி பூத்திருக்கு பாத்திருக்க மலருது பார்வைக்கு அழகு பாலரின் மனதுக்கு மகிழ்வு! காடுகள்...

Continue reading