“இயற்கை வரமே இதுவும் கொடையே”
-
By
- 0 comments
இயற்கை வரமே இதுவும் கொடையை…
-
By
- 0 comments
உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவார் முன்னே
அகநாநூறில் அன்பு பேசுகிறது
புறநாநூறில் வீரம் பேசுகிறது
மக்கள் சங்ககால வாழ்வை
அணுகி வாழ்வதா இல்லை
இன்றைய சூழலுக்கேற்ப
வாழ்வை அமைப்பதா
எனத்தடுமாறுகையில்
வென்றது என்னவோ
இக்கால வாழ்க்கை முறையே
சொந்தங்கள் அருகிருந்தால்
சொர்க்கமாகும் அருகாமை
உறவுகளுக்குள் பிரிவினை
ஏற்பட்டால் நரகமாகும்
ஒவ்வொருவரின் குணாதிசயங்கள்
அவரவர் மரபணுவைப்
பொறுத்தே இருக்கும்
அதன்படியே அவர்நடப்பர்
இன்றைய சூழலில்
மனிதர்கள்
உள்ளொன்று வைத்து
புறமொன்று பேசுகிறார்
பேசுவது தெரிந்தும்
பொறுக்கின்றோம் அவர்செயலை
நேரே அவர். பிழையை
சுட்டிக் காட்ட முடியாது
சுட்டினால் பொறுக்காது
வெட்டி விடுவார் உறவை
நேரே பேசினால் பொல்லாதவர்
பின்னால் பேசுபவர் நல்லவர்
இதில் யார் வல்லவர்
புறமுதுகு காட்டா பரம்பரையில்
வந்த நாம் புறம்பேசுதல்
தகுமா
புறம்பேசி மற்றவர் மனதில்
ரணமாக்காதீர்
இனியாவது மக்கள் திருந்து வார்களா!

Author: Nada Mohan
-
By
- 0 comments
-
By
- 0 comments