வலியதோ முதுமை

வலியதோ முதுமை

சிறுதுளி பெருவெள்ளம்
நிறைமதி நிலவும் காலம்

துறுவென வளரும் வாழ்வில்
ஆண்டொன்று சென்றுவிட்டால்
வயதொன்றும் போய்விடுமே
அனுபவத்தால் முதிரும் முதுமை

வெறுமையின்றியே வாழ்வையும் நகர்த்தியே நின்றது
சாதனைகள் எத்தனையோ சரித்திரம் கண்டதும்

போதனைகள் செய்யவும் வலிமைகளாகிவரும் முதுமையின் சிறப்பு

வாழும்போதினிலே தேசபக்தர்கள் எத்தனை
ஆன்றோர்களாக நின்ற ஆண்மீகவாதிகள் எத்தனை
சோதனைகள் கடந்து வெற்றிகண்ட மாமனிதர்கள் எத்தனை

விரும்பியோ விரும்பாமலோ வலியவே வருவதுதான் இளமையின் மாற்றம்

பருவத்தின் நிலையிலே பலவகையான கொள்கைகள் மாற்றம்

பூவாகிப் பிஞ்சாகி காயாகிப் பழமும் ஆவதுதானே

இயற்கையின் நியதியும் விதியின் பாதையிலே வருமே வலியதோ முதுமையும்

சர்வேஸ்வரி சிவருபன்

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் உயிரூட்டும் உருவங்கள் பயிரூட்ட நீர் ஊற்றியே வளர்த்திட்டது போலவே வாழ்வுப் போராட்டமதில் சாதித்திடவே பிறந்தோர் பணி செய்வதே தியாகம் பூரிப்பூட்டும்...

Continue reading

வசந்தா ஜெகதீசன் பூமி.... சுற்றிச் சுழலும் சுவாசமே சுதந்திர தேசம் ஞாலமே பற்றிப் படரும் வாழ்க்கையில் பயணம் செய்யும் படகிது தத்தி...

Continue reading