நகைப்பானதோ மனிதநேயம் 79
-
By
- 0 comments
நகைப்பானதோ மனிதநேயம்
-
By
- 0 comments
இதனாலே எல்லாம் இதனாலே
கவி 718
இதனாலே எல்லாம் இதனாலே
கொண்ட பண்பை இழப்பதும் இதனாலே
கொண்ட அன்பை மறப்பதும் இதனாலே
பாசம் பசையாய் ஒட்டுவதும் இதனாலே
உறவுகள் உருகி கரைந்துவிடும் இதனாலே
இதுவன்றி ஓரணுவும் அசைந்துதான் விடுமோ
இதற்காக பம்பரமாய் சுற்றாதவன் எவனோ
இது உண்ணமுடியாது இதுவின்றி உண்ணவே முடியாது
கட்டுக்குள்ளும் இருக்கும் கட்டுக்கடங்காதும் இருக்கும்
சங்கடத்தை உருவாக்கி சஞ்சலத்தை நிறைக்கும்
சமத்துவத்தை உற்பத்தியாக்கி ஏற்றத்தாழ்வையும் குறைக்கும்
கட்டிலுக்கு அடியில் பதுங்கியே கிடக்கும்
பெட்டிகளுக்குள்ளே கறுப்பாக பிணமாகவும் கிடக்கும்
இது உயிர்வாழ மிகமிக அவசியம்
இதுவரைக்கும் செய்துகொண்டிருக்கின்றது உலகில் அதிசயம்
சுகபோக வாழ்க்கைக்கு முக்கியமான ஒன்றென்று
உல்லாசப்பட்சிகள் உவகைபொங்க உச்சரிப்பதுமுண்டு
ஆயுளில் முக்கால்வாசி இதற்காகவே தொலைந்தது
என்னாயினும் வாழ்க்கையும் இதற்காகவே அலைந்தது
எங்கும் எப்போதும் எவருக்கும் தேவையானது
தங்குதடையின்றி வேண்டும் இதனது சேவையானது
ஜெயம்
03-04-2024
Author: Nada Mohan
-
By
- 0 comments
-
By
- 0 comments
-
By
- 0 comments