கமலா ஜெயபாலன்

பணம்
பணம்
வாழ்ந்து கெட்டவன் வறுமைக்கு அஞ்சினான்
வாழ்வே மாயமென்று வருந்தி அலைந்தான்
மூழ்கியும் எழுந்தும் முழுவதும் அறிந்ததும்
ஊழ்வினை விட்டு உயர்வைக் காண்பான்

பணம் பந்தியிலே குணம் குப்பையிலே
பிணமும் வாய்திறக்கும் பணமென்றால் பழமொழி
கணமும் உறங்காமல் கட்டிக் காத்து
பிணமாய் போக பின்னால் வருமா

நல்லது செய்து நால்வருக்கு கொடுப்பதே
வல்லது என்பேன் வாய்மையும் அதுவே
சொல்லது சுத்தமாய் சுகமாக வாழ்தல்
உல்லாச வாழ்வில் உயர்ந்தது இதுவே
கமலா ஜெயபாலன்

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

    Continue reading