அதிகரிக்கும் வெப்பம்

நகுலா சிவநாதன் அதிகரிக்கும் வெப்பம் கோடை வந்தால் கொள்ளை மகிழ்வு வாடை குறையும் வசந்தப்பொழுதாய் வேளைதோறும் வெப்ப விடியல் வேண்டும்...

Continue reading

சிவா சிவதர்சன்

[ வாரம் 260 ]
“பணம்”

பணமின்றி வாழமுடியாத இன்றைய உலகம்
பசிக்கு உணவும் படுக்க இடமில்லா அவலம்
பணமின்றி அன்றைய மனிதன் பண்டமாற்றின் அதிசயம்
பாடுபடு,சோம்பலறு! அடைவாய் பணப்புழக்கம்

பணம் என்னடா பணம்? குணம்தானடா நிஜம்
பசித்த வயிற்றுக்கு பால் ஊற்றுமா குணம்?
வேண்டாமே இந்த வேதாந்தம்! முயன்றுதேடு சுகம்
பணம் பந்தியிலே குணம் குப்பையிலே,காண்கிறாய் நிதம்

மிதிபடுபவன் கூட பணம்வந்தால் மதிக்கப்படுகிறான்
இல்லாதவன் வாய்ச்சொல் இல்லாளும் கேளாள்
ஈன்றெடுத்த தாயும் தேடாள்
முயற்சி திருவினையாக்கும்,இலட்சுமி கடாட்சம் தருவாள்

பணமே சாதனை செய்யுங்கூரிய ஆயுதம்
தனியொருவர் முதல் அரசுவரைகையாளும் சூட்சுமம்
பிறருழைக்க அதில் சவாரி செய்தலே இவர்களது சுபாவம்
பெற்ற தாயையும்விற்கத்துணிந்தவர், பணம்படுத்தும் பாடாம்.

நன்றி வணக்கம்
சிவா சிவதர்சன்.

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-07-2025 இயற்கை அழிவு ஒருபக்கம் இனக்கலவரம் மறுபக்கம் தியாகத்தின் விதை சரித்திரமாகி தாயகக்கனவு கலைந்த கதையிது… சேவல்...

    Continue reading