29
Jan
இல75
தலைப்பு = நிழலாடுதே நினைவாயிரம்
நிலாவைக் காட்டி சோறூட்டிய காலம்
துள்ளித்...
29
Jan
நினைவாயிரம் நிழலாடுதே!
-
By
- 0 comments
நகுலா சிவநாதன்
நினைவாயிரம் நிழலாடுதே!
நினைவாயிரம் மனங்களில் நிழலாடுதே!
நிஐமாக அது கண்டு சுழலாடுதே!
கருவிலே வளர்த்த பலம்...
29
Jan
நிழலாடுதே நினைவாயிரம்……
“ நிழலாடுதே நினைவாயிரம் “ கவி....ரஜனி அன்ரன் (B.A) 29.01.2026
காலத்தின்சுவடுகள் காத்திரமான...
பாலதேவகஜன்
நேரம்
காலநேரம் பார்த்தியம்ப
பக்கத்தில் நீ இல்லை அம்மா!
குறுகிய காலத்தோடு
குன்றிப்போன உன் ஆயுளுக்காய்
இன்றுவரை அழுதபடி
இன்பமில்லாதவனாய் இருக்கின்றேன்.
ஏன் இந்த நிலை எனக்கு
உன் கருவில் நான்
தரித்திட்ட நேரம் தவறா?
இல்லை நான் பிறந்திட்ட
நேரம் தவறா?
என் சரியில்லா நேரம்தான்
உந்தன் உயிரை பிரிய வைத்ததுவோ?
நேர்த்தியோடு எனை வளர்த தாயே!
பூர்த்தியான வாழ்வுக்குள்
நான் நுழையும் தறுவாய்
நீ! தவறிப்போனதினால்
என் வாழ்வு பூச்சியமானது.
ஒருத்தி உனை பிரிந்ததினால்
வருத்தி போட்டது வாழ்வு
கால ஓட்டத்திலும் கலையாத
உன் பிரிவின் வலி
என் காலம் உள்ளவரை
என்னை கலங்க வைத்திடுமே
எனக்கான நேரம்
எப்போதுதான் பிறக்குமோ!
அப்போது ஆனந்தம்
என்னில் நிலைக்குமோ!
தப்பாத உன் நினைப்பு
அந்த ஆனந்தத்தை
தள்ளித்தான் வைக்குமோ!
Author: Nada Mohan
27
Jan
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
திங்கள்..
ஈராறு கூட்டின் தோப்பு
இணைந்தே நகர்ந்திடும் தொடுப்பு
ஓவ்வொன்றும் தாங்கும்...
25
Jan
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
27-01-2026
தேங்கி நிற்கும் நீரல்ல வாழ்வு
தேடுதல் நிறைந்து ஓடும் நதி
ஞாயிறு...
25
Jan
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
மார்கழியில் தொங்கிய திங்கள்
ஊர் கழிப்பில் தங்கிய சந்திரன்
சொந்தக்காரப் பங்கழிப்பன்றோ
சிறுவரில் தூங்க அம்புலிமாமியே
சிவப்பு...