Selvi Nithianandan சித்திரையும் வந்ததே (611)

சித்திரையும் வந்ததே

சித்திரையில் வந்ததொரு வருடமும்
சிங்காரமாய் இரண்டு நாளாம்
சிற்றுண்டி பொங்கல் மகிழ்வும்
முத்திரையாய் குரோதி வந்ததே

அறுபது ஆண்டினது கணிப்பு
அறிமுக பட்டியலின் பணிப்பு
ஆண்டும் பகைகேடாய் இருப்பு
ஆனந்தமாய் அவனியில் நிறைப்பு

விடுமுறை வந்ததால் மகிழ்வு
விடியலும் பொங்கலாய் உணவு
உறவுகளும் வாழ்த்தாய் சொல்ல
உளமும் மகிழ்வாய் சென்றதே.

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் மார்கழியில் தொங்கிய திங்கள் ஊர் கழிப்பில் தங்கிய சந்திரன் சொந்தக்காரப் பங்கழிப்பன்றோ சிறுவரில் தூங்க அம்புலிமாமியே சிவப்பு...

Continue reading