பூமாதா

„பூமாதா” கவி …. ரஜனி அன்ரன் (B.A) 18.04.2024

அழகான நீலத்தேவதையே
ஆதவனைச் சுற்றிவரும் தாரகையே
கோடி மக்களை கோடி உயிர்களை
மடி மீது சுமக்கும் பூமாதாவே
பொன்னுலகம் தந்த தாயே
நீ எங்கள் பொக்கிஷம்
நீ எங்கள் தாய் !

கடல் கொண்ட கரைகளும் அலைகளும்
சலசலக்கும் ஆறுகளும் ஓடைகளும்
எழிலான மலைச்சிகரங்களும்
எண்ணற்ற வளங்களும் வனங்களும்
இயற்கையின் வனப்புக்களும்
எல்லாம் நீ தந்த கொடையே
உன் அகம் கொண்ட செல்வங்களே !

பூக்கள் சிரிக்கும் பூந்தோட்டம் நீ
ஆறுகள் பாய்ந்திடும் அதிசயகூடம் நீ
மனதை மயக்கும் மண்வாசம் நீ
தங்கமும் வைரமும் கொண்ட மங்கை நீ
பச்சைப் பட்டாடை போர்த்திய பாவை நீ
உணவும் நீரும் காற்றும் எமக்குத் தந்து
உயிர் வாழ வைக்கும் உத்தமியே
பாதுகாப்போம் பக்குவமாய் உன்னை
பூமாதாவே நீ எங்கள் குலமாதா !

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் மார்கழியில் தொங்கிய திங்கள் ஊர் கழிப்பில் தங்கிய சந்திரன் சொந்தக்காரப் பங்கழிப்பன்றோ சிறுவரில் தூங்க அம்புலிமாமியே சிவப்பு...

Continue reading