“திறனின் மேன்மை தீட்டும் குழந்தைகளே”

கவி இல(130) 25/04/24

விலக்கிய கல்லே
மூலைக்கு முதன்மை கல்
ஆவதுபோல
செதுக்காத கற் சிலைகள்
செதுக்க செதுக்க
பொற்சிலை ஆவது போல
செப்பமில்லா எப் பொருளும்
செப்பனிட செப்பனிட
பொன்போல ஒளிர்ந்திடுமே

திறமைகள் படைப்புக்களை
ஒழித்து வைத்து
வேடிக்கை காட்டும்
உலகமிது

பரிவு கொண்ட சிற்பி இவர்
மெல்லிய உளி கொண்டு
மென்மையாய் தட்டி உயிரூட்டி
வளர்த்தெடுத்த செல்வங்கள்

வாரந்தோறும் பாமுகத்தில்
திறனின் மேன்மையினை
தீட்டும் குழந்தைகள்
பார்ப்போர் மனம் மகிழ
பெற்றோர் உளம் களிக்க
பேசுங்கள் பாடுங்கள் வாழுங்கள்

முயற்சிகள் இரட்டிப்பாக
அக்களிப்பு தொடர்ந்திட
பாரெல்லாம் மகிழ்ந்திட
செதுக்குகின்ற சிற்பியையும்
மனதார வாழ்த்துகின்றோம்.
வாழ்க வளமுடன்.
நன்றி வணக்கம்.

Nada Mohan
Author: Nada Mohan