திறனின் மேன்மை, தீட்டும் குழந்தைகளே

அனைவருக்கும் வணக்கம்🙏
வியாழன் கவிதை
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
கவி இலக்கம்-25

25-04-2024

திறனின் மேன்மை,
தீட்டும் குழந்தைகளே

குழந்தைச் செல்வம்
குறைவில்லாத இன்பம்
பொருந்தி வந்தால்
பூர்வீகப்பலன்!

திறனின் மேன்மை,
தீட்டும் குழந்தைகளே
அறமும் அன்பும்
பெருகிட வேண்டும்!

சிந்தனை, உணர்தல்
சீர் பெற வேண்டும்
நிந்தனை எல்லாம்
சீராக வேண்டும்!

சுற்றமும் சூழலும்
உணர்ந்த நிலையில்
சுமுகமாக உதவிட
வேண்டும்!

பெற்றவரும், உற்றாரும்
பேதமுடன் பெருந்தகை
நண்பர்களை
வளர்த்தெடுக்க வேண்டும்!

விளையாட்டுத் திறனை
பெருக்கிட வேண்டும்
வீடு தோறும் குலாவி
விளையாடிட வேண்டும்!

பாமுகத்திலும் பல்துறை
பங்கேற்பு சிறப்பு, வியந்தோம்
எதிர்காலதில் தீப்பொறியாக
சுடர் விட்டெரிந்திட வேண்டும்!

நன்றி வணக்கம்
ஜெபா ஸ்ரீதெய்வீகன்.

Nada Mohan
Author: Nada Mohan