தன்னம்பிக்கை 82

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 22-01-2026 சுற்றியிருக்கும் இருள் சூறையாட நினைத்தால் துணிவெனும் தீச்சுவாலை கொழுந்து விட்டெரியட்டும்! விழுந்தால் எழுவாய் விதிதனை வெல்வாய் விடியும்...

Continue reading

உழைப்பாளர் தினம்

அனைவருக்கும் வணக்கம்🙏
வியாழன் கவிதை
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
கவி இலக்கம்-26

02-05-2024

உழைப்பாளர் தினம்

உழைப்பின்றி ஊதியமில்லை
உழைப்பும், அர்ப்பணிப்பும்
நாட்டைக் கட்டமைக்க
நம்மைக் காப்பாற்ற

உழைப்பாளர்க்கு நன்று
ஒன்று மே சிகாகோவில்
8மணி நேர வரையறை
போராடித் தீர்த்த உரிமையிது!

கல் உடைப்பவர் முதல்
விண்வெளி செல்பவர் வரை
கண் அயராமல்
தன் மான வாழ்வு கொண்ட

உழைப்பாளர் இவரே!
உதிரத்தை உழைப்பாக்கி
உலகத்தை உயர்த்தி
வியர்வை சிந்தியவர்கள்!

குடும்பத்தைக் காக்க
ஓய்வின்றி களமிறங்கியவர்கள்
உழைப்பாளர் அர்ப்பணிப்பை
உள்ளத்திலிருத்தி வணங்கிடுவோம்!

நன்றி வணக்கம்
ஜெபா ஸ்ரீதெய்வீகன்.

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் மார்கழியில் தொங்கிய திங்கள் ஊர் கழிப்பில் தங்கிய சந்திரன் சொந்தக்காரப் பங்கழிப்பன்றோ சிறுவரில் தூங்க அம்புலிமாமியே சிவப்பு...

Continue reading