Selvi Nithianandan அன்னைக்குநிகருண்டோ அவனியிலே ( 614)

, 09-05-2024 Selvi Nithianandan : அன்னைக்குநிகருண்டோ அவனியிலே

காலமும் எமக்காய்
வாழ்ந்து
கண்அயரா வலிகளை
சுமந்து
நேரமும் எமக்காய்
அர்ப்பணித்து
நேர்த்தியும் பலசெய்து
நெஞ்சினில் தாங்கியவர்

பசிதனை மறந்து
பணிவிடை செய்து
ருசிதனை துறந்து
உணவினை உண்டு
தன்னிலை மறந்து
தம்மகவுகள் கண்டு
தரணியில் உயரவே
தாங்கிய தூணானார்

: கருவறை சுமந்தவர்
கல்லறை ஆனார்
ஆண்டுகள் ஜந்தும்
அடங்கிடா வலியும்
மாண்டவர் மீண்டும்
வருவார் என்னும்
நினைவுகள் மறவாது
நித்திலம் வாழ்தல்நன்றே

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் ஆறறிவு படைத்த மாந்தரில் பொங்கிடும் பல உணர்வுப் பொறியில் சிக்கி ஐந்தறிவு புடைத்த மிருகம் ஆக்கிடுமே அறிவில்...

Continue reading

வசந்தா ஜெகதீசன் இனிவரும் காலம்--- தொன்மை மறைந்திடும் தொழில்நுட்பம் வளர்ந்திடும் தொடரும் வாழ்வில் சிக்கல்கள் செதுக்கலாய்...

Continue reading