அன்னைக்கு நிகருண்டோ அவனியில்…

தந்தையர் தினமாகும் மதிப்பிலே
அன்னையர் தியாகத்தின் நிகருக்கு
அவனியில் ஈடேது உறவிலே
தன்னிகரில்லாத தாய்மையே
தந்தையர் அன்பிலும் மெய்ப்படும்
தாங்குதூண் உறவாக வசப்படும்
காரிருள் நீக்கிய வான் போல
காசினி மிளிரப் பெய் மழையாக
நேசமும் அன்பும் ஒன்றிக்கும்
தாய்மையின் உறவ தனித்துவம்
தைரியத் தந்தையே முதலிடம்
பேணிடும் சீர்கொள் சிறகிற்குள்
பேறுகொள் பிள்ளைகள் பெரும்பேறு
நேர்பட வழிசொல் வாழ்வு செப்பி
அறநெறி பாடத்தில் அறிவூட்டி
அவனியில் ஈகையின் ஈரமூட்டி
பலப்படும் அன்பில் பாசமூட்டி
பண்பட்ட இல்லத்தில் பாதுகாத்து
நிமிர்விலே நித்தில வேரூன்றி
நிறைமதியானார் தாயன்பில்
நிகரெனப் பாசத்தில் குன்றில் விளக்காய்
தாய்மையை தனக்குள் அடைக்கலமாய்
வாய்மையில் வழியிட்ட மறு உருவம்
தந்தையே அவனிக்கு ஆணிவேராய்
தாயென வாழ்கின்ற உறுதுணையே
பாதைகள் கதை சொல்லும் பலநூறாய்
பண்பட்ட இதயங்கள் வரலாறாய்
அவனிக்கு நிகருண்டா இரு தாய்மை
அன்னையும் தந்தையும் இருசுடர்கள்
வாழ்வினை ஒளிர வைத்த வரம் நீங்கள்.
நன்றி மிக்கநன்றி

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் ஆறறிவு படைத்த மாந்தரில் பொங்கிடும் பல உணர்வுப் பொறியில் சிக்கி ஐந்தறிவு புடைத்த மிருகம் ஆக்கிடுமே அறிவில்...

Continue reading

வசந்தா ஜெகதீசன் இனிவரும் காலம்--- தொன்மை மறைந்திடும் தொழில்நுட்பம் வளர்ந்திடும் தொடரும் வாழ்வில் சிக்கல்கள் செதுக்கலாய்...

Continue reading