மாசற்ற உலகே நோயற்ற வாழ்வு……

இரா விஜயகௌரி இனிதாம் வாழ்வியல் பயணத்தொடரில் இடரெனச் சூழ்ந்திடும் நோயின் தொடுப்பு காற்றினில் மூச்சாய் கலந்திடும் கிருமி உள்துளைபுகுந்து...

Continue reading

கீத்தா பரமானந்தன்

குருதிப்புனல்!
சந்ததி சந்ததியாய் வாழ்ந்த பூமியில்
வந்தவனும் போனவனும் போட்ட வெறியாட்டம்
குந்திஇருக்க இடமின்றிக் கொத்துக் குண்டிடை
நொந்து தவித்து நிர்க்கதியாய் நின்றநிலை

பிஞ்சுகள் பூக்கள் பேதையாம் மூத்தோர்
வஞ்சகரின் இனவெறியில் வதைபட்ட கோரம்
மந்தபுத்திக் காரனால் கருவறையும் கல்லறைம்
கந்தகக் காற்றிடை ஒன்றான சாபம்!

சொந்தங்கள் இழந்து அங்கங்கள் சிதறி
அபலைகளாய்த் தமிழர் அல்லலுற்ற கோலம்
சமாதனமன்றுகளும் சாமியும் சத்தமற்றுப் பார்த்திருக்க
அந்தமானோர் ஆயிரமாய் மறக்குமா மறக்கலாமா?

நந்திக்கடலும் குருதிப்புனலாக நாநனைக்க நீரின்றி
அந்தரிச்ச பொழுதும் பந்தங்களைத் தேடலும்
வந்தலைத்து நிற்கிறதே வாழ்வெல்லாம் எங்களுடன்
இந்தநிலை மாறிடுமா இதயங்கள் கேவலுடன்!

கீத்தா பரமானந்தன்
13-05-24

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

    Continue reading