பாசப்பகிர்வினிலே………!!

Shanthini Thuraiyarangan பாசம் வைத்து பயபக்தியாக வளர்த்து பார்போற்றி வாழ தன்வாழ்வை பணயம் வைக்கும் உருவே எம் அன்னை எத்தனை பிள்ளைகளானாலும் அத்தனை...

Continue reading

பாசப்பகிர்விலே!

நகுலா சிவநாதன் பாசப்பகிர்விலே! சித்திரத்தாயே முத்திரிரை பதித்த முழுமதி பத்திரமாற்றுத் தங்கமாய் பழங்கதை பேசுவாய் படர்கின்ற கொடியே பண்பாட்டுப்பெட்டகம்...

Continue reading

எல்லாளன்

சந்தம் சிந்தும் சந்திப்பு 266“. நிர்மூலம். “நாடொன்று வேண்டும் நமக்கென்று உணர்ந்து
வீடொன்றை கட்டி
விட்டார் தந்தை செல்வர்
கட்டி எழுப்பிய கட்சியதோ கிளை
விட்டு பரந்தது
தமிழரசு பூக்க
தளம் இட்டு வளர்ந்தது
அன்றய ஆயுதம்
அகிம்சை கை எடுத்து
சிங்களம் மட்டுமே
சிலோனுக்கு சட்டம்
என்றவர் மன்று முன்
இருந்தார் படையுடன்
அன்றது ஆரம்பம்
ஆனி ஐந்து ஐம்பத்தாறு
நிலவரம் உடனே
கலவரமாக
காடையர் புரிந்த
காடை செயல்கள்
உடைமைகள் உயிர்கள்
தமிழர் கடைகள்
கனலில் எரிந்தன
இன வெறி ஏற்றி
அரியணை ஏற
இதுவழி என்றே
கண்டது தெற்கு
இனி யாம் ஒருவர்
என்றனர் தந்தை
தனியாய் வேண்டாம்
தமக்கு தலைமை
கூட்டணி மலர
கொள்கை பலம்பெற
வீட்டை விட்டேகி
உதய சூரியன்
உதயமாம் ஈழம்
இதய சுத்தியாய்
விடுதலை ராகம்
சிங்களம் பொங்க
செங்களம் ஆட
எங்கள் இளைஞர்
இயக்கங்கள் எழும்ப
தம் அற போரை
தலைவர்கள் அடக்கி
இயக்கங்கள் உயர
ஏற்றன ஆற்றியும்
ஏக தலைமை
என்ற வெறியால்
எம்மவர் குண்டுகள்
எங்களுக் எதிராய்
எதையும் தாங்கி
ஈழ விடியல்
விடுதலை புலிகள்
வேட்கை என்றாகி
வெற்றிகள் பலதும்
யுத்த முனையில்
மொத்தமாய் அனைத்தும்
முள்ளி வாய்காலில்
முடிவு என்றானது
எதிரியோடு ஏனய நாடுகள்
அழிவுகள் எரிவுகள்
ஆயிரம் ஆயிரம்
உயிர்பலி கொடுத்து
ஓய்ந்தது மறப்போர்
மீண்டும் அறப் போர்
ஆண்ட பரம்பரை
ஆசன ஆசையில்
முதிச வீட்டை
தூசி தட்டி சுண்ணாம்பு
பூசி
ஆர் கையில் சாவி
அடிபாட்டில் பாறி
வீடு நிர்மூலம்
ஏக தலைமை
என்ற ஆசையில்
தாகம் தமிழ் ஈழம்
தானாய் நிர்மூலம்
சோகம் சோகம்
வீடும் நிர்மூலம்
-எல்லாளன்-

Nada Mohan
Author: Nada Mohan

    அன்னை செல்வி நித்தியானந்தன் கருவறையில் எமைச்சுமந்து கண்விழித்து உயிர்காத்து கருணையில் தனிச்சிறந்து களிப்பாய் வதனமேத்து உதிரத்தால் உறவுசேர்த்து உயிர்கொடுத்த உத்தமியே உறவுகள் பலஇணைந்து உள்ளூர...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் பசுமை.. புரட்சியின் புதுமை காட்சியில் பசுமை ஆட்சியில் அருமை அகிலத்தின் மெருகை அழகுறு வசமாய் ஆக்கிடும் எழிலாய் நீக்கிடும் வெறுமைக்கு நிகரேது செப்பு! பூக்களும்...

    Continue reading