தாங்கமுடியவில்லை..!!

தாங்கமுடியவில்லை பத்து நாட்கள் திருவிழா பரவசமாய் முடிவு பெற பக்தியுடன் சனங்களும் புடைசூழ்ந்து நிற்கவே காவடி கற்பூரச்சட்டி அணிவகுத்து செல்ல அம்மன் பவனிவர அரோகரா...

Continue reading

கவிதை நேரம்-16.05.2024 கவி இலக்கம்-1874 வைகாசி பதினெட்டு —

Jeya Nadesan

கவிதை நேரம்-16.05.2024
கவி இலக்கம்-1874
வைகாசி பதினெட்டு
——————–
2009 வைகாசி பதினெட்டாம் நாள்
அழியாத அழிக்க முடியாத நாள்
வையகமே இருட்டடித்து இருளாகி
இதயத்தை கசக்கி பிழிந்த
இருண்ட ஓர் கொடிய நாள்
வருடங்கள் பல கடந்து சென்றாலும்
வருத்தது எம் மக்களின் பிரிவு நாள்
உறவுகளை பிரிந்து போனவர்கள் அல்ல
பிரித்து வைத்த மிக கொடியவள்
மணம் முடித்த தன் மனைவியிடம்
பிரியாமல் பிரிவோம் என மடிந்தவர்கள்
மனைவி பிள்ளைகளை அனாதையாக்கி
தத்தளிக்க வைத்த கொடூரம் நிறைந்த நாள்
சுதந்திரக் காற்றை சுகமாக சுவாசித்தவர்கள்
நச்சுக் காற்றை முகர்ந்து மடிந்தவர்கள்
விடை பெற்று சென்ற நியதியில் உள்ளாகி
விதி வரைந்த நாள் வைகாசி பதினெட்டு

Nada Mohan
Author: Nada Mohan

சந்த கவி இலக்கம் _196 சிவாஜினி சிறிதரன் "களவு" பசி பட்டினி பஞ்சத்தால் களவு பாத்திருந்து திருடுபவர் வழித்தெருவில் கொள்ளையடிப்பு! உழைக்க பிழைக்க...

Continue reading