அதிகரிக்கும் வெப்பம்

நகுலா சிவநாதன் அதிகரிக்கும் வெப்பம் கோடை வந்தால் கொள்ளை மகிழ்வு வாடை குறையும் வசந்தப்பொழுதாய் வேளைதோறும் வெப்ப விடியல் வேண்டும்...

Continue reading

அபிராமி கவிதாசன்

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம் -268

தலைப்பு ! “பெண்ணே”
……
அழகியலின் படைப்பே – காதல்
ஆண்கவரும் உயிர்ப்பே
பழகுவதில் இனிப்பே – நீ
பகையென்றால் நெருப்பே!

மானுடத்தின் பெண்ணே – நீ
மனிதநேயக் கண்ணே!
ஊனுடம்பைப் பெற்றாய்- எனை
உயிருகப் பெற்றாய்

ஆதியில்நீ உயர்ந்தாய் – பின்
அடுப்படியில் கிடந்தாய்
வாதிட நீ மறந்தாய் – நின்
வாழ்வில்தகுதி இழந்தாய்!

வலிமைகுன்றி நடந்தாய் – தலைவர்
வரவால்புலியாய் எழுந்தாய்!
அலைகடல்நீந்திக் கழித்தாய் – பகை
அரக்கன்கப்பலை உடைத்தாய்!

எதற்குமஞ்சாத் துணிச்சல் – நீ
எதிலும்போடு எதிர்நீச்சல்
முதற்குமுதலாய் இருப்பாய் – நீ
முத்தமிழ்த்தாயின் இருப்பாய்!

அறிவியல்உலகில் முயற்சி – நீ
அனைத்திலும் செய்வாய்ப் புரட்சி!
அறிவெனுமாய்தம் தூக்கு – உன்
அன்னைமண் விடுதலையாக்கு!

எத்துறையாயும் கற்றிடு – பெண்ணே
எதிலும்முதன்மைப் பெற்றிடு !
வித்தெனக்கருத்தரை ஆற்றிடு! – பெண்ணே
விடுதலைமுற்றிலும் பெற்றிடு!

— அபிராமி கவிதாசன்
04.05.2024

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-07-2025 இயற்கை அழிவு ஒருபக்கம் இனக்கலவரம் மறுபக்கம் தியாகத்தின் விதை சரித்திரமாகி தாயகக்கனவு கலைந்த கதையிது… சேவல்...

    Continue reading