விரல் நுனியில் அறிவியல்

சிவருபன் சர்வேஸ்வரி

விரல் நுனியில் அறிவியல்

ஆழமெதுவென அறியுமுன்பே அடிக்குள் துடிக்கும் கரங்கள்

சீலமதில் இன்று சிறப்பான தேடல்களும்
காலம் பதில் சொல்லுமெனக் காத்திருக்கவும் தேவையில்லை

விரல்நுனியில் வித்தாரம் போடும் வலையத்தளங்கள்

ஏக்கமும் கலையும் தூக்கமும் துலையும்
பார்த்துப் பார்த்தே
எழுதிடும் இன்பம்

வளமான வளங்கள் வாரியும் இறைக்கும்

மாறியே நின்றாலும் மகிழ்வுறத் திரும்பும்
சோதனையின் வெற்றியும் சாதனையில் மிளிரும்

பாதகமில்லாத ஆட்டங்கள் தொடரவும் அபினையசுந்தரி ஆனந்த நடனம்

தினமும் தீராத காதலின் இன்பம்
கனமும் நீங்கியே காவியமும் ஆனதே
எனித்தினம் தழுவிடும் என்விரல் நுனியும்
மனமினித்திடும் மாகா சவுக்கியம்

சிவருபன் சர்வேஸ்வரி

Nada Mohan
Author: Nada Mohan

வசந்தா ஜெகதீசன் நாடகம்... முத்தமிழின் கூட்டுக்கலை முழுநீள அழகுக்கலை வரலாற்றுப் பேரெடும் வந்திணைத்த கதைகூறும் இசையோடு இயலும் இணைந்தாகும்...

Continue reading