வசந்தா ஜெகதீசன்

வலி..
வாழ்வின் பாதை செதுக்கிய ஓடம்
வலிகளின் சுவடுகள் காயங்களாகும்
ரணமாய் கணமாய் கீறலின் பதிவு
ஆறிடும் வேளை
பட்டறிவின் பகிர்வு
அம்பெனத் தைத்து அனுபவம் கூறும்
வலிகளும் வழிகளைத் தேடியே ஓடும்
வருமுன் காத்திட
வரம்பென ஆகும்
உடுக்கை இழந்தவன் கைபோல உதவியின் நிஜத்தில் உபாதையே குன்றும்! நன்றி
மிக்க நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் மார்கழியில் தொங்கிய திங்கள் ஊர் கழிப்பில் தங்கிய சந்திரன் சொந்தக்காரப் பங்கழிப்பன்றோ சிறுவரில் தூங்க அம்புலிமாமியே சிவப்பு...

    Continue reading