சட்டமும் திட்டமும் 683

Selvi Nithianandan

சட்டமும் திட்டமும்

அநுராவின் சட்ட திட்டம்
அடுத்து நுழையும் கட்டம்
அம்பலம் ஆகும் தேட்டம்
ஆரம்பமே மறைக்கும் கூட்டம்

ஊழல் மோசடி மீண்டும் தீவிரம்
உயிர்த்த ஞாயிறை மறக்காத ஆர்வம்
உயிர் கொலை விசாரணை தொடரும்
உதிரமும் ஆட்டத்தில் நின்று போகும்

அண்டைய நாடுகளின் தந்திர நிலைப்பாடு
பண்டைய சரித்திரம் தொடரும் உறுதிப்பாடு
தொண்டைக்குள் விழுங்கி விட்ட இடர்பாடு
மண்டையும் சிந்திக்க வைக்குது பணநோட்டு

வங்கி கணக்கு வரியும் விதிப்பு
வரியும் செலுத்த மறுத்தால் பறிப்பு
வணிக மாற்றத்தில் பணத்தின் மதிப்பு
வரிசையாய் வரணும் சட்ட அணிவகுப்பே

Nada Mohan
Author: Nada Mohan

வசந்தா ஜெகதீசன் பூமி.... சுற்றிச் சுழலும் சுவாசமே சுதந்திர தேசம் ஞாலமே பற்றிப் படரும் வாழ்க்கையில் பயணம் செய்யும் படகிது தத்தி...

Continue reading

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம்_208 "பூமி" சுற்றும் பூமி சுழலும் பூமி பூ கோளம் யார் போட்ட கோலம்! அம்மா என்னை சுமந்தாள் கண்ணியமாய் கருணை...

Continue reading