தை தைமாசம்
-
By
- 0 comments
“பூத்திட்ட புத்தாண்டிலே”
-
By
- 0 comments
பாலதேவகஜன்
அந்த ஒற்றை ஆசானின்
உயர்வு குணங்களை
மீட்டுப் பார்க்கின்றேன்
மீளவும் கேட்கிறேன்.
இத்தனை ஒழுக்கமாய்
இன்று நான் இருப்பது
அந்த ஒற்றை ஆசானின்
காலத்தில் நான் கற்றதே.
அன்பால் நனைவதும்
அதட்டலால் மலைப்பதும்
அடியால் பதறுதலும்
அந்த ஒற்றை ஆசான் ஒருவருக்கே.
எதை எதையோ கற்றுத்தர
எத்தனையோ பாடு பட்டார்
விதம் விதமாய் கதைகள் சொல்லி
விரும்பியே படிக்க வைத்தார்.
அரும்பும் வயசில் அத்தனையும்
அகல்வின்றி பதிய வைத்தார்
அவர் பிள்ளயாய் எங்களையும்
அகத்தினிலே இருத்தி வைத்தார்.
அவர்போல வாத்தி யாரு?
அகிலத்தில் இனி பிறக்கமாட்டார்
அப்படியே பிறந்தாலும்
அவரை ஒருபோதும் மிஞ்சமாட்டார்.
இன்றய வாத்தியள்
படிப்பித்தலை தவிர
எதை எதையோ செய்து
பதை பதைக்கவும் வைக்கினம்.
விளங்கம் கேட்ட பிள்ளையை
விளக்கணைக்க கேக்குறாரு
விருப்பம் இல்லையென்றால்
வீடியோ காட்டி மிரட்டுராரு.
தன் பிள்ளை வயசென்று
தறுதலைக்கு தெரிஞ்சி்ருந்தும்
தப்பாதமான் பாக்குறாரு
தாகம் தீர்க்க துடிக்குறாரு.
உச்சமில்லா தண்டனைக்கால்
உச்சி உச்சி வருகிறாரு
ஒழுக்கமான வாத்தியரையும்
தலை குனிய வைக்குறாரு.
கரண்டு கம்ப தண்டனைகள்
வறண்டு போன காலமிது
முரட்டுத்தன வாத்தியர்கள்
முளைத்தெழும்பும் காலமுமிது.
நீங்கள் குருவாய் உயர்ந்தது
குற்றம் புரியவா?
மாற்றம் தேடும் உலகில்
நீங்களும் புனிதமாகுங்கள்.
அடுத்த சந்ததியின் இறமைகள்
உங்கள் திறமையில் என்பதை
நினைவில் கொண்டு நாங்கள்
கைகூப்பும் கடவுளராகுங்கள்.
Author: Nada Mohan
-
By
- 0 comments
-
By
- 0 comments