முயற்சி தரும் பயிற்சி 774

செல்வி நித்தியானந்தன் முயற்சி தரும் பயிற்சி சரீரத்தின் பாதுகாப்பு சஞ்சலமற்ற தற்காப்பு சந்தோச முயல்வு சரிநிகரான நகர்வு காலையிலே. சேர்வும் கற்றதை...

Continue reading

முயற்சி தரும் பயிற்சி

செல்வி நித்தியானந்தன் முயற்சி தரும் பயிற்சி சரீரத்தின் பாதுகாப்பு சஞ்சலமற்ற தற்காப்பு சந்தோச முயல்வு சரிநிகரான நகர்வு காலையிலே. சேர்வும் கற்றதை...

Continue reading

மாமருந்து

நேவிஸ் பிலிப் கவி இல (348) 24/10/24

ஆறறிவு மனிதருக்கு
ஆண்டவனருளிய அன்பளிப்பு
அகத்தினழகை முகத்தில் காட்டும
பற்றிக் கொள்பவரை
தொற்றிக் கொள்ளும்

விலை மதிப்பில்லாதது
விற்பனைக்கு வராதது
மனித குலத்திற்கே உரித்தானது
உடல் நல வாழ்விற்கு சத்தானது

இன்முகம் காட்டி நன் மனம் சேர்க்கும்
நோய்களே இல்லா பேரின்பம் காட்டும்
சோதனை வரும்கால் துணையாய் காக்கும்
வேதனை தீர்க்கும் நட்பாய் மாறும்

வேறெந்த உயிரிலும் இல்லாத ஒன்று
நம்மிடம் இதை விட வேறேது நன்று
எம்மோடு பிறரையும் இன்புற செய்யும்
முகம் மலர்ந்து சுகம்தரும் நல் மருந்து
அதுவே சிரிப்பென்னும் மாமருந்து
நன்றி வணக்கம்.

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading