ஆக்கம் 329 விதியின் விளையாட்டு

ராணி சம்பந்தர் ஜெர்மனி

24.10.24
ஆக்கம் 329
விதியின் விளையாட்டு

விதியின் கெலி விளையாட்டு
யாருக்கும் புரியாத ஒன்று
சதியின் புலி வேட்டை
எவருக்கும் தெரியாது
இல்லை என்றும்

பதியின் பலிக் கூட்டில்
அலையும் உயிரும்
உருக்குலையும் உடலும்
வெறித்தனமானது
என்றென்றும்

இதுவோ முன்னால்
போனாலென்ன
பின்னால் வந்தாலென்ன
கண் மட்டும் திறந்தா
பார்க்கப் போகிறது

ஆகாயத்தில் கோட்டை
கட்டி பூமிக்குள் சாமியைக் கூட்டி
வைத்திடினும்
போகிற உயிர்
எவர் தடுத்திடினும்
நவரச நாடகத்தில்
முன்னுக்கோ அல்லது
பின்னுக்கோ போகத்தானே போகிறது.

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

Nada Mohan
Author: Nada Mohan

சிவரூபன் சர்வேஸ்வரி செந்தூரப்பூவே ஃஃஃஃஃஃஃஃஃஃஃ செந்தூரப்பூவே செங்காந்தள் விழியே வருவாயே// மந்தாரம் கொட்டும் மாசில்லாத வீணையிலே// ஒய்யாரமாக ...

Continue reading