“இன்றைய உலகு”

நேவிஸ் பிலிப் கவி இல (365) 05/12/24

வியப்பாய் விசித்திரமாய்
பொருளாதாரப் புரட்சி
வசதி வாய்ப்பின் வளர்ச்சி
ஆடம்பர பொருட்களின் திரட்சி

உள்ளத் தளர்ச்சி
புறக்கணிப்பால் அயர்ச்சி
வெளிக்காட்டப்படாத
மறுத்தல்கள் மறுப்புக்கள்

வானுயர் மாட மாளிகைகள்
அங்கே வாழத்தான் மனிதர் இல்லை
பணத்துக்குப் பஞ்சமில்லை
அன்புக்குத்தான் பற்றாக் குறை

உணவுகள் கிடைக்குது வித விதமாய்
ஊட்டச்சத்து விகிதங்கள்
குன்றிப் போனதாய்
இல்லாமையும் தொடர் கதையாய்

தொலை தூரங்களை இணைக்க
நீண்ட நெடுஞ்சாலைகள்
குறுகிய நேரப் பயணங்கள்
ஆனால்
நெருங்கியவர்களிடம் பேச மனமில்லா
ஈரமற்ற நெஞ்சங்கள்.

நன்றி வணக்கம்.

Nada Mohan
Author: Nada Mohan

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-07-2025 இயற்கை அழிவு ஒருபக்கம் இனக்கலவரம் மறுபக்கம் தியாகத்தின் விதை சரித்திரமாகி தாயகக்கனவு கலைந்த கதையிது… சேவல்...

Continue reading