நட்பென்றாலே

ராணி சம்பந்தர் பரிதவிக்கும் நேரம் புரிந்துணர்வுடனே கை கொடுப்பாரே உறங்க மறுத்த விழியை ஊக்கமிட்டு உரமூட்டித் தாகந் தீர்க்கும் தோழரே நடமாடும் மனிதர்...

Continue reading

(திருத்தம் ) நட்பென்றாலே 30.07.2026

நட்பென்றாலே (772 )செல்வி நித்தியானந்தன் அன்பு அரவணைப்பு என்றும் கைகொடுப்பு ஆபத்தில் அறிந்து துணையாகும் சிறப்பு அகிலத்தில் நட்பு நல்லதொரு...

Continue reading

மொழி

ஜெபா ஸ்ரீதெய்வீகன்

🙏அனைவருக்கும் வணக்கம்🙏
வியாழன் கவிதை
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
கவி இலக்கம்-43
05-12-2024

மொழி

உலக மொழிகளுள் மூத்தவளே
முச்சங்கம் வளர்த்தவள் நீயல்லவா
தேனினும் இனிய செம்மொழியே
தெவிட்டாமல் நாவுரைக்கும் எம் மொழியே!

வண்ணப் பாட்டு எடுத்து
வாஞ்சையோடு கதை தொடுத்து
அருமையான கவி கிறுக்கி
அகம் குளிர நிற்கின்றேன்!

கண்ணினென் தமிழ்மொழியே
கண்ணாய் உனைப் போற்றி
திசை எட்டும் பரவி வர
திகட்டாமல் இயம்பி நிற்ப்பேன்.

நன்றி வணக்கம்
ஜெபா ஸ்ரீதெய்வீகன்.

Nada Mohan
Author: Nada Mohan