மதிமகன்

சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்: 289
10/12/2024 செவ்வாய்
“ஈரம்”
———
நெஞ்சில் ஈரமின்றி,
நேர்மை ஏதுமின்றி,
வஞ்சகம் செய்வாரடி- மகளே!
வருந்தார் எப்போதுமடி!

அச்சம் எதுவுமின்றி,
ஆணவக் குறைவுமின்றி,
பச்சையாய் செய்வாரடி-மகளே!
பண்படாத மனிதரடி!

நச்சு நச்சென்று……..
நாள்முழுதும் குறைசொல்லி,
நச்சரிப் பாரடி- மகளே!
நன்மையேதும் செய்யாரடி!

துச்சமாய் எடுத்தெறிந்து,
“தூசு நீ” என்று சொல்லி,
எச்சில் உமிழ்வாரடி-மகளே!
ஏளனமும் செய்வாரடி!

பேச்சில் இனிமையின்றி,
பேதலிக்கும் குணமுமின்றி,
கூச்சமும் காட்டாரடி-மகளே!
கும்மியடிக்கும் மனிதரடி!

இச்சை கொள்வாரடி..
இம்சையும் செய்வாரடி..
குச்சென்றும் பாராரடி-மகளே!
குனிந்தும் செல்வாரடி!
நன்றி
மதிமகன்

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-07-2025 இயற்கை அழிவு ஒருபக்கம் இனக்கலவரம் மறுபக்கம் தியாகத்தின் விதை சரித்திரமாகி தாயகக்கனவு கலைந்த கதையிது… சேவல்...

    Continue reading