நாடொப்பன செய்
மரணித்தவனே மறுபடி வந்தால்
சக்தி சக்திதாசன்
சந்தம் சிந்தும் சந்திப்பு
“மார்கழி”
(விருப்பு தலைப்பு)
மதிநிறை மாதமாம் நன்னிறை
மார்கழி பிறந்தது இனிதாக
மகிழ்வுடன் அருள்நிறை கொண்டே
மாதமிது தவழ்ந்தது இந்நாள்
அகவையை உருட்டிடும் மாதங்கள்
அகிலத்தில் பன்னிரெண்டு காண்கிறோம்
அவற்றுள் விஷேசமான மார்கழி
அதனுள் எத்தனையோ மகிமைகள்
அகிலாண்டேஸ்வரரின் அற்புத
ஆருத்திர தரிசனம் திருவாதிரையில்
அருள்நிறை பெருமாளின் திருநாள்
அற்புத வைகுண்ட ஏகாதேசியன்றோ ?
சிவனுக்கு திருவெம்பாவை திருபள்ளியெழுச்சி
சிங்கார விஷ்ணுவுக்கு திருப்பாவையென
திருபலநிறைந்த மங்கலமான மார்கழி
தித்திக்கும் வகையில் பிறந்ததின்று
மானிடர் கண்டிடும் ஓரகவை
மாண்புநிறை தேவர்க்கு நாளென்பர்
மார்கழி தானவர்க்கு அதிகாலையாம்
மகத்துவம் நிறைந்திட்ட பிரம்மமுகூர்த்தம்.
தெய்வாம்சம் நிறைந்த மார்கழியை
தெய்வீக சிந்தையுடன் வரவேற்போம்
தெளிந்த நல்ல உள்ளத்துடன்
தெய்வத்தின் பாதங்களைச் சரணடைவோம்.
சக்தி சக்திதாசன்
