பண்படுமோ பண்பாடு ??

ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026 யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று பேதம்கடந்த நேசமே...

Continue reading

பாலதேவகஜன்

பூக்கும் புத்தாண்டு

புதிதாய் பூக்கும்
புத்தாண்டே! வருக
விதியை வெல்கின்ற
மதியையே தருக.

பதியில் அமர்ந்தவரே!
உம் கதியாய் நின்றவர்
கஸ்ரங்களை போக்கும்
கருணையினை காட்டும்.

மாற்றம் நிகழுமென்று
எதிர்பார்திடும் புத்தாண்டே!
போற்றும் ஆண்டாய் நீ
பூத்திட மாட்டாயோ.

தோற்றதன் வலிகள்
தொலைந்திட வேண்டும்
வெற்றியின் படிகள்
தொடர்ந்திட வேண்டும்.

பிரிந்தவர் அனைவரும்
சேர்ந்திட வேண்டும்
சேர்ந்தவர் யாவரும்
செழிப்புற வேண்டும்.

மாபெரும் ஆண்டாய்
நீ மாறிட வேண்டும்
அமைதியில் உலகே!
உறைந்திட வேண்டும்.

மனங்களில் குரோதங்கள்
மங்கிட வேண்டும்
மகிழ்வு ஒன்றையே
மனமிருத்திட வேண்டும்.

அதிகார உச்சம்
ஓய்ந்திட வேண்டும்
அனைவரும் சமத்துவம்
பேணிட வேண்டும்.

அடுத்தவர் நலன்களை
காத்திட வேண்டும்
அடுத்த சந்ததிக்காய்
வாழ்ந்திட வேண்டும்.

அகதி வாழ்வு
அகன்றிட வேண்டும்
அனைவரும் தாயகம்
திரும்பிட வேண்டும்.

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading