தாங்கமுடியவில்லை..!!

தாங்கமுடியவில்லை பத்து நாட்கள் திருவிழா பரவசமாய் முடிவு பெற பக்தியுடன் சனங்களும் புடைசூழ்ந்து நிற்கவே காவடி கற்பூரச்சட்டி அணிவகுத்து செல்ல அம்மன் பவனிவர அரோகரா...

Continue reading

சக்தி சஞர்

வணக்கம்!
சந்தம் சிந்தும் சந்திப்பு
பூக்கும் புத்தாண்டு
**********************

அறுசீர் விருத்தம்
சீர் வரையறை
காய் காய் காய்/ காய் காய் காய்

நம்பிக்கை ஊட்டுகின்ற ஆண்டாக
நானிலத்தில் எங்கணுமே நன்மைகளும்
தும்பிக்கை யான்அருள வேண்டுமன்றோ
துன்பங்கள் நீங்கிடவும் துரோகங்கள்
நம்மைவிட்டுத் தொலைந்திடவும் நல்லதொரு
நாடாக மலரவேண்டும் என்றேதான்
கும்மியடித்து வரவேற்போம் புத்தாண்டை
குதூகலமாய்க் கொண்டாடி மகிழ்ந்திடுவோம்!
சீராக ஆட்சியும்தான் நிலவணுமே
சிறுமைகளும் மறைந்திடவே வேண்டுமன்றோ
நேராக நடத்திடவே நேர்மையுள்ள நெஞ்சங்கள்
பிறக்கட்டும் புத்தாண்டில்
ஏராளம் நன்மைகளும் செய்திடுவோம்
ஏழைகளின் வாழ்வும்தான் சிறக்கணுமே
பாராய ணமும்பாடி வரவேற்போம்
பாரினிலே புதுவாழ்வு பூத்திடவே!

நன்றி வணக்கம்!

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இசை இசையோடு எல்லாம் இவ்வுலகுஇணைத்திடும் பசைபோல ஒட்டியே பாரினில் சிறந்திடும் அகிலத்தில் எல்லாமே இசையோடு சேர்ந்திடும் அன்றாட ...

    Continue reading