மதிமகன்

சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்: 292
14/01/2024 செவ்வாய்
சிறுமை கண்டு பொங்குவாய்
——————————————-
பொங்குவாய் நிதம் பொங்குவாய்
பொறாமை நீங்கிட பொங்குவாய்
சிங்கமென எங்கும் பொங்குவாய்
சிறுமை கண்டதும் பொங்குவாய்!

மங்கும் நீதிக்காய் பொங்குவாய்
மண்நலம் காத்திட பொங்குவாய்
பங்கம் வந்திடில் பொங்குவாய்
பாரபட்சம் காணப் பொங்குவாய்!

சங்கத்தமிழ் உயரப் பொங்குவாய்
சாதிவெறி அகலப் பொங்குவாய்
எங்கள் நிலைமாற பொங்குவாய்
ஏழ்மை தொலைய பொங்குவாய்!

அங்கு இங்கெனப் பொங்குவாய்
ஆனந்த வாழ்வுக்கு பொங்குவாய்
பொங்கு தமிழுக்கு பொங்குவாய்
போகுமிடம் சிறக்க பொங்குவாய்!

சங்காரம் கண்டால் பொங்குவாய்
சரித்திரம் மாறின் பொங்குவாய்
பங்கமென உணரின் பொங்குவாய்
பாரினில் எமக்காய் பொங்குவாய்!
நன்றி
மதிமகன்

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-07-2025 இயற்கை அழிவு ஒருபக்கம் இனக்கலவரம் மறுபக்கம் தியாகத்தின் விதை சரித்திரமாகி தாயகக்கனவு கலைந்த கதையிது… சேவல்...

    Continue reading