வசந்தா ஜெகதீசன்

விடியலும் லெஸ்பியன்......

விடியலும் வெற்றியும்–
அறுவடை தருகின்ற கதிர்நாற்றின்
அச்சாணி உழவனின் உழைப்பாற்றல்
பாறைகள் பிளந்தும் பயிர்செய்வான்
படும்பாட்டிலே வியர்வையின் வெற்றி வரும்

காளையும் ஏரும் கைத்தடியாய்
கடும் கோடையில் கூடி பயிர்செய்து
வாடிடும் உயிர்கள் பசிபோக்கும்
வண்ணத்து ஒவியன் கமக்காரன்

ஆண்டிலே முதற்த்திங்கள் அரும்பிவரும்
ஆதவன் உழைப்பிற்கு நன்றி தரும்
பாரெல்லாம் பகலவன் மூலதனம்
பசுமையின் வளத்திற்குப் பேர் உபயம்

சீர் பெறும் செதுக்கலில் உலகமயம்
சிறப்புற விதைக்கின்ற கதிரவனே
வெற்றியும் விடியலும் ஆதாரம்
நன்றிகள் செப்பிடும் தைப்பொங்கல்

நம்மவர் பண்பாட்டு முதற்திங்கள்
ஞாயிறு தாங்கிடும் விடியலிலே
நம்பிக்கை பெறுவது நானிலமே
குன்றிக்கு விளக்காய் ஒளிதரும்
குவலயச் செம்மலின் திருநாளில்
விடியலும் வெற்றியும் ஆதாரம்
அவனியின் வாழ்விற்கு ஒளிக்கோலம்.
நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-07-2025 இயற்கை அழிவு ஒருபக்கம் இனக்கலவரம் மறுபக்கம் தியாகத்தின் விதை சரித்திரமாகி தாயகக்கனவு கலைந்த கதையிது… சேவல்...

Continue reading