மொழியும் கவியும்

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

23.01.25
ஆக்கம் 175
மொழியும் கவியும்

உணர்வில் பெற்ற
தோற்றம்
ஊற்றெடுத்துக் கற்ற
மொழியில் சொல் நயமோ அடுக்குத்
தொடுப்பில் ஆற்றல்
கொட்டிக் கொண்டதே

வாய் ஒலியும் ,கை அசைவும்
மெய் எனும் உடம்பில்
பொய் எனும் இரை
மீட்பும் பேராற்றலில்
ஒட்டிக் கொண்டதே

விளக்கம் விபரிக்கும்
பழக்கமதில் உள்ளம்
உவகை பொங்க
ரசனை விரிந்து
உவமானம் உவமேயம்
ஒப்பீடு தொங்க
மொழியும் கவியும்
ஒன்றோடொன்று
போட்டி போட்டுக் கொண்டதே.

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

Nada Mohan
Author: Nada Mohan