மொழியும் கவியும்

நேவிஸ் பிலிப் கவி இல (384) 23/01/25

“அ”என்ற எழுத்தானாய்
ஆதி பகவானுக்கே உரித்தானாய்
அம்மா என்ற சொல்லெடுத்து
அகிலமே ஆட் கொள்ளும் அன்பானாய்

இறைவனோடு இணைந்த மொழி
இயற்கையோடு இயைந்த மொழி
தெள்ளு தமிழ்அழகுக்கு
ஈடிணை உண்டோ இவ்வுலகில்

அருந்தமிழ் அருவியிலே
அகழ்ந்தெடுத்த முத்தெனவே
தீந்தமிழால் சொல் தொடுத்து
படைக்கின்றேன் கவியொன்று

காலம்தான் கடந்திடினும்
பண்பட்ட பழைய மொழி
புலம் பெயர் தேசமெங்கும்
புதுமையாய் பொலிந்துடுதே

ஆர்வமாய் பயிலுகின்றார்
உரை நடையும் வாசிப்புமாய்
அடுத்த தலை முறைகள் மிடுக்கோடு
வளருதெங்கள் பா முகத்தில்

வந்தனைகள் செய்திடுவோம்
மனதார வாழ்த்திடுவோம்
எட்டுத் திக்கும் பரவியிங்கே
தங்கத் தமிழ் வளர்ந்திடவே
நன்றி வணக்கம்…..

Nada Mohan
Author: Nada Mohan