மதிமகன்

சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்: 293
28/01/2025 செவ்வாய்
கவியழகு
————-
கரு ஒன்று மலரும்-பின்
கை காலும் முளைக்கும்!
உரு தானே நகரும்-பின்
உணர் வதற்கு தெரியும்!

உள் நின்று துவளும் -தான்
உலா வரத் துடிக்கும்!
சொல் சொல்லாய் சேரும்-பின்
சோர் வின்றித் தொடரும்!

எதுகை மோனை இணையும்
எளிதாய் சந்தமும் சேரும்!
புதிய கற்பனை தோன்றும்-நல்
புத்துணர்வு தானே பிறக்கும்!

காலமும் கனிந்து வரும்- சிசு
கையில் வந்து சேரும்!
கவி தன் பெயரென்றும்-தன்
கவின் இதுவென்றும் கூறும்!

பிரமன் படைப்பதில்-தினம்
பிறப்ப திங்கு உயிர்கள்!
கவிஞன் உழைப்பினில்-உலகு
காண்பது அழகுக் கவிகள்!
நன்றி
மதிமகன்

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-07-2025 இயற்கை அழிவு ஒருபக்கம் இனக்கலவரம் மறுபக்கம் தியாகத்தின் விதை சரித்திரமாகி தாயகக்கனவு கலைந்த கதையிது… சேவல்...

    Continue reading