மனோகரி ஜெகதீஸ்வரன்

முகமூடி

சந்தையில் விற்கா முகமூடி
சொந்த முகத்தை
தொலையச் செய்யும் அகம்மூடி
சின்னச் சிறுசுகள் அணியா முகமூடி
பென்னம் பெரிசுகள் அணிகின்றோம்
வகைவகையாய் தேடி

குமுறும் உள்ளத்தை மறைக்க
கூசு மொழிகளைக் கடக்க
நேச மனிதரைக் காக்க
வீசு வதைகளை வீழ்த்த
காசு சொத்துக்களைக் கவர
மோச நிகழ்வுகள் நிகழ்த்த
ஆசா பாசங்களை அனுபவிக்க
பாச வலைகள் வீச
பற்றுகளைப் பதமுறத் தூவ
இல்லாமை இயலாமை மறைக்க
போர்குணங்கள்
வெளித்தெரியா திருக்க
சொல்லாமலே போடுகின்றோம் முகமூடி
கல்லாமலே காலத்துக்கும் ஏற்றபடி
வெல்லுமது சிலவேளை நல்லபடி
செய்யுமது நன்மை வரும்படி
எய்யும் பலதோ குழறுபடி
செய்யும் அதுவும் அனற்குழி

மனோகரி ஜெகதீஸ்வரன்

Nada Mohan
Author: Nada Mohan