கவிதையெனக் கிறுக்கினேன்(52)…
புனித ரமலானே
திரைத்துறையின் முன்னோடி
“ திரைத்துறையின் முன்னோடி “ கவி…ரஜனி அன்ரன் (B.A) 27.02.2025
ஈழத்து திரைத்துறையின் முன்னோடி
புகலிட திரைப்படத் துறையின் தந்தை
புலத்து கலைஞர்களுக்கெல்லாம் கர்த்தா
தன்னிகரில்லாத் தமிழ் பற்றாளன்
பல்கலை வித்தகன் ஞானம் பீரிஸ் ஐயா
இவ்வுலகை விட்டு ஏகினாரே
மாசித் திங்கள் பதினெட்டில் பாரிஸ் மண்ணிலே !
எழுத்துத் துறையின் வித்தகன்
எழுதிக் குவித்தார் தாராளமாக
ஏராளமான சிறுகதைகள் பாடல்கள்
சிறுவர் நூல்களென தொடர்ந்தது படையல்கள்
தனிப்புறா விடுதலைப் பாதையிலே நீஒருதெய்வமென
மூன்று முழுநீளத் திரைப்படங்களை
முத்தாகத் தந்து மகுடம் சூடினாரே புலத்தினிலே !
கலைத்தாகம் கொண்ட கலைஞன்
கலைஞர்களை எல்லாம் கெளரவம் செய்த கலைஞன்
சமூகப் பணிகளையும் ஆற்றிய தொண்டன்
சாட்மாதா ஆலயத்திற்கு நடை பவனியில்
ஆண்டுதோறும் பாத யாத்திரை சென்று
பக்தர் குழாமையும் இணைத்து
அன்னை மரியாளை தரிசித்த மானிடன்
அன்னைக்காக எழுதிய விடைகொடு தாயே விடைகொடு
என்ற பாடல் போல் நிரந்தரமாகவே விடைபெற்றாரே !
