கவிதையெனக் கிறுக்கினேன்(52)…

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
13-03-2025

ஈழமண்ணை இழந்த அப்பாவியாகி
இதயக்கிடக்கைகள் சில எழுத்தாகி
தொலைந்து போன கனவுகள் பலவாகி
தொக்கிநிற்கும் நினைவுகளும் மேலாகி

ஆழ்மனது எண்ணமெல்லாம் கொட்டித்தீர்த்து
அலைபாயும் அருவியாய் ஊற்றெடுக்க
சிறுகதையும் நாடகமும் சிறகடிக்க
சிறுகவிதையும் பட்டிமன்றமும் சிங்காரிக்க

தளமொன்று தந்தவரை தலைவணங்கி
தாழ்வுமினி வேண்டாமென அரங்கேறி
எழுத்தாக புனைந்து அள்ளி எழுதித்தள்ளி கவிதையெனக் கிறுக்கினேன் தமிழேகேள்!

தாய்மண்பற்று தரமாயுண்டு என்னிடமும்
தமிழை ஆழ்ந்து படிக்காவிடினும்
தமிழின் அழகில் மயங்கி நானும்
தலையாய கடமையெனக் காப்பேன்..

Jeba Sri
Author: Jeba Sri

சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

Continue reading