வாழ்த்து கவி

மனோகரி ஜெகதீஸ்வரன்

சந்தம் சிந்தும் சந்திப்பே – நீ
சிந்தும் சந்தம் தித்திப்பே

நீயணிந்திருப்பதோ கவியாரம்
அதுகொடுக்குது ஒய்யாரம்
அதனால் அகலுது மனப்பாரம்

முந்நூறு வாரம்
முடிசூடும் நேரம்
சூட்டுகின்றோம் வாழ்த்தாரம்

வாராவாரம் தலைப்பை தலைப்பை வீசி
தோதான தகவலைக் கவிகளாக வாங்கி
தருகின்றாய் தாராளமாய் செவிக்குணவு
பருகிக் களிக்கின்றது தமிழுறவு
மருவற்று வளர்கின்றது தமிழ்நிலவு

கவிவரிகளைத் தீண்டி கவனமுடன் நோண்டி
பழுதைக் காட்டுகின்றாய் சுட்டி
கவிக்கட்டலை மெருக்கேற்ற

கனகச்சிதமாய் காட்டுகின்றாய் நிறையை
கவியாக்குதிறன் கூட்ட

வாராவாரம் வளர்கின்றோம் பழுதறுத்து

சோராமலே நிற்க்கின்றோம்
கவிதொடுத்து

வேராய் இருப்பவள் நீதானே தாயே
நேராய் நடப்பவளும்
நீதானே தாயே
தமிழுரும் தேரே
சந்தம் சிந்தும் சந்திப்பே
ஊருராய் ஊரும்
உன்ணொளியொலி
பாராள வேண்டும் எந்நாளுமே

வாழ்க வாழ்கவே

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் மார்கழியில் தொங்கிய திங்கள் ஊர் கழிப்பில் தங்கிய சந்திரன் சொந்தக்காரப் பங்கழிப்பன்றோ சிறுவரில் தூங்க அம்புலிமாமியே சிவப்பு...

Continue reading