ஆத்மராகங்கள்

சக்தி சிறினிசங்கர் தமிழ்மணம் கமழும் தேசத்தை நேசித்த நெஞ்சங்களில் சுமந்தனர் நஞ்சுமாலையை நெஞ்சில் துணிந்தனர் கொஞ்சும் தமிழ் காக்க மறந்தனர்...

Continue reading

வரமானதோ வயோதிபம்

இரா.விஜயகௌரி
வரமனதோ வயோதிபம்
வளமானதோ வழ்வின் தடம்
வியப்பானதோ விரியும் எல்லைகள்
விந்தையுமானதோ வாழ்வின் மொழி

திடமானதுன் தெரிவி்ன் முனைகள்
முடிவானது தினத்தின் நடைமுறை4
எல்லையுள் நின்றதுஉணவின் தெரிவு
உவப்பானது உடலின் பயிற்சி

அதனால் தெளிவானது சிந்தனை விரிவு
உரத்துப் பேசின எல்லைகள் எதுவென
முடங்காதெழுந்தன முடங்கிய கால்கள்
முனைப்பொடு விரிந்தன பலமொடு கைகள்

தாங்கிட தேடிய தோள்களை விடுத்து
தனித்துவ எழுச்சியை திடமுடன் வரைந்து
எழுதிடும் வாழ்வு வரமாய் வழங்கிய
வயோதிபம்கூட அழகிய பருவம்

அணைத்து மகிழ்ந்து அயலோர் இணைய
கூடி உறவிடும் குதூகல வயது

Nada Mohan
Author: Nada Mohan

வசந்தா ஜெகதீசன் கல்லறைகள் திறக்கும்..... விடுதலை வேட்கையும் வீரத்தின் உணர்வும் ஓன்றித்த போர்க்காலம் ஓயாத அலை போல அவலமும் அழிவும்...

Continue reading