வரமானதோ வயோதிபம்

நேவிஸ் பிலிப் (கவி 412)

மதியின் முயற்சியால் உயர்ந்தோர்
ஐக்கிய மனப் பான்மை
ஒன்று பட்ட வாழ்வு
புரிந்துணர்வு தன்மை
முனைப்பான இலட்சிய அவா

பதறாமல் காரியமாற்றி
சிதறாமல் கூட்டிச் சேர்த்து
பக்குவமாய் வாழ்ந்த வாழ்க்கை
வரமானதே

சின்னச் சின்ன கதைகள் சொல்லி
பண்பாட்டை மனதில் ஊட்டி
பாட்டியோடு தாத்தாவும் கை கோர்த்து
பிறரோடு இணைந்து வாழும் முறைகள்சொல்லி
வளர்த்த விதம் மறக்கலாமோ.?

சுருங்கிய கண்ணின் பார்வையும்
பல்லில்லா வாயின் சிரிப்பும்
பஞ்சு போல நரைத்த வெண் முடியும்
வயோதிபத்தின் அழகைக் காட்டி நிற்க
அதுவும் எமக்கு வரமானதே.

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் மார்கழியில் தொங்கிய திங்கள் ஊர் கழிப்பில் தங்கிய சந்திரன் சொந்தக்காரப் பங்கழிப்பன்றோ சிறுவரில் தூங்க அம்புலிமாமியே சிவப்பு...

Continue reading