” வரமானதோ வயோதிபம் “

ரஜனி அன்ரன் (B.A) “வரமானதோ வயோதிபம் “ 20.03.2025

வாழ்க்கைப் பயணமதில்
வயோதிபம் காலத்தின் கட்டாயம்
அந்திம காலத்து அத்தியாயம்
அன்பிற்காய் ஏங்கும் இதயம்
வாழ்ந்த வாழ்வின் அடையாளம்
வதனப் பொலிவின் வரிக்கோலம்
வரமானதோ வாழ்வின் இறுதியில் வயோதிபமாக !

வெண்கம்பிக் கேசம் கதை சொல்ல
விழிமடல்களில் குழியும் விழ
கால் போகும் திசையில் நடந்து
கால்கள் மூன்றாகி நடக்கையில்
மனம் மட்டும் மரம்விட்டு மரம்தாவ
வாழ்ந்த காலங்களின் இரைமீட்புக்காலம்
வரமானதோ வயோதிபக் காலமதில் !

இளமைக்கால நினைவுகள் அலைமோத
இறுமாப்புக்களும் வந்து நினைவூட்ட
வாழ்ந்த வாழ்வு காட்சியாக
வாரிசுகளும் வம்சத்தின் சாட்சியாக
பேரன் பேத்தியரும் மாட்சிமையாக
வரமானதே வாழ்வினை நிறைவாக்க வயோதிபமும் !

ராணி சம்பந்தர் மார்கழியில் தொங்கிய திங்கள் ஊர் கழிப்பில் தங்கிய சந்திரன் சொந்தக்காரப் பங்கழிப்பன்றோ சிறுவரில் தூங்க அம்புலிமாமியே சிவப்பு...

Continue reading