வரமானதோ வயோதிபம்

நகுலா சிவநாதன் 1801

வரமானதோ வயோதிபம்

வளமான வாழ்வில் வந்திடும் வயோதிபம்
வரமாக ஏற்றகணும் தந்திடும் பருவமிதை
இயற்கையின் நியதியில் இதுவுமொன்று
செய்ற்கையாய் மாற்ற முடியாத பருவம்

வரமாய் வாழ்வின் வருவது முதுமை
தரமாய் வாழ்ந்த வாழ்வை எண்ணி
தரணியில் கிடைத்த பருவம் முதுமை
உரமாய் இதையும் ஏற்றல் பெருமையன்றோ!

மனித வாழ்வின் மகத்தான பருவம்
வாழ்ந்து முடித்து அசைபோடும் காலங்கள்
தாழ்ந்து போகா வாழ்வை தரணிக்கு வழங்கும்
தளராத பருவம் வயோதிபம்

வாழ்கையில்; முதுமை
வரலாற்றுப் பெருமை
அனுபவ திரட்சி அதற்குள்ளும்
மௌனமாய் ஓர் வாழ்க்கை

நகுலா சிவநாதன் 1801

Nada Mohan
Author: Nada Mohan

ஜெயம் நியதி நடப்பவைதான் நடக்குமென்பது காலதேவன் கணக்கு கடந்துபோகும்  நாட்களெல்லாமதை சொல்லிவிடும் உனக்கு தலைகீழாய் நடப்பினும் நிகழவேணுமென்பதே...

Continue reading

செல்வி நித்தியானந்தன் நியதி காலத்தின் நியதி கட்டாயமாகும் ஞாலத்தின் நியதி மாறுபாடாகும் பாலமாய் நியதி இணைவாகும் கோலமாய் நியதி வேறுபாடாகும் வாழ்வின் சக்கரம் வரமாகும் வீழ்வதும் உயர்வதும் பாடமாகும் விதியின் விளையாடல் எதுவாகும் விடை புரியாதென்பதே இருப்பாகும் மதியின்...

Continue reading