பட்டமரம்

ஜெயம்
ஒரு காலத்தில் அழகின் ஆட்சி
உறுமாறியே இப்போ அசிங்கமாய் காட்சி
கூடுகட்டி பறவைகள் வாழ்ந்ததொரு காலம்
தேடுவாரற்று மொட்டையாய் இன்றைய கோலம்

துள்ளிவந்து ஏறும் சிறுவர்கள் கூட
தள்ளிவைத்தே போனார் வேறிடம் விளையாட
சுட்ட வெய்யிலுக்கு ஒதுங்கிடும் கூட்டம்
பட்டமரமென்று நிழல்தரா மரமென ஓட்டம்

கட்டுடலை தாங்கியே பசுமையை சுமந்தது
வெட்டியதை எரிக்க நிலைமையும் அமைந்தது
தளிர்க்காது கிடக்கும் கிழட்டு மரம்
இழந்து பலத்தை தவிக்கும் மரம்

உயர்ந்த மரமும் உக்கிய வேரும்
பயணற்றுப் போனாலே இதுபோலவே யாரும்
படிப்பினை ஊட்டும் பட்டமரக் கதை
முடிவு மரமென்ன மானிடர்க்கும் வதை

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

Continue reading

செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

Continue reading