” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

துளிர்ப்பாகும் வசந்தம்

ராணி சம்பந்தர்

குளிரும் கூதலும் குறைந்திடவே
பளீரென மனமது நிறைந்திடுதே
ஒளிரும் கற்றை கூடிக்குலாவுதே

துள்ளிக் குதிக்குது சந்தோஷம்
மெல்லத் துளிர்ப்பாகும் வசந்தம்
துருவித் துருவி மிளிரும் அரும்பு
உருமேனியில் ஒளிக்கற்றை பூசிட
கூசியே மலருமது மொட்டுக்கள்

பறவை அங்குமிங்கும் உலாவிட
புறாவும் இலைகளிற்கிடையில்
ஒளித்திருந்து கூடுகட்டிக் குஞ்சு
பொரித்த முனகு சத்தம் ஆனந்தம்

புது வாழ்வில் பூத்திடும் சிந்தனை
பூமியில் புத்துயிரூட்டப் புன்னகை
தளமாகும் விவசாயி நற்பலனாக
வளமாகத் துளிர்ப்பாகும் வசந்தம்.

Nada Mohan
Author: Nada Mohan