அலை-71

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
29-04-2025

அலை அலையாய் கனவுகள்
அலைந்து போன வாழ்வினால்
நிலையற்று போன கதை
நீவிரும் தான் அறிவீரோ

மீண்டெழும் அலை போல
மீண்டுமொரு சுமை யாத்திரை
வேண்டாத கொடிய நோயும்
விரைந்திங்கே உணவு மாத்திரை

கரை வரும் அலைபோல
கரைந்து போக சோகங்கள்
நிரையான முயற்சி நிலைத்து
நரை வந்தாலும் நடைமுறையாக்கி

அமைதியான் கடல் போல
அலையற்ற வாழ்வு நிலையாக
சிலையற்று சிறுபயிற்சி செய்து
சீரான வாழ்வு செதுக்கிடுவோம்.

Jeba Sri
Author: Jeba Sri