அன்னை

அன்னை
செல்வி நித்தியானந்தன்
கருவறையில் எமைச்சுமந்து
கண்விழித்து உயிர்காத்து
கருணையில் தனிச்சிறந்து
களிப்பாய் வதனமேத்து

உதிரத்தால் உறவுசேர்த்து
உயிர்கொடுத்த உத்தமியே
உறவுகள் பலஇணைந்து
உள்ளூர மனமகிழ்ந்து

அன்பென்ற கூட்டினிலே
ஆசியாய் இணைவினிலே
அன்னையின் நினைவினிலே
அவனியில் எந்நாளும்வாழ்த்துடனே

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் மார்கழியில் தொங்கிய திங்கள் ஊர் கழிப்பில் தங்கிய சந்திரன் சொந்தக்காரப் பங்கழிப்பன்றோ சிறுவரில் தூங்க அம்புலிமாமியே சிவப்பு...

Continue reading