பள்ளிப்பருவத்திலே

நகுலா சிவநாதன் பள்ளிப்பருவத்திலே பள்ளிப் பருவத்திலே பாலராய் நாம் துள்ளியோடி துயர் நீக்கிய பருவமன்றோ! அள்ளி அறிவைப் பெற்று...

Continue reading

பள்ளிப்பருவத்திலே………

இரா.விஜயகௌரி பள்ளிப் பருவத்திலே அன்று துள்ளித்திரிந்ததொரு காலம் அள்ளிப்பருகிய அறிவின் துளி கள்ளம் களைந்ததொரு கனிவின் மொழி உள்ளக்...

Continue reading

பள்ளிப் பருவத்திலே…

ரஜனி அன்ரன் (B.A) பள்ளிப் பருவத்திலே…… 22.05.2025

வாழ்வின் முதற்படி
வரலாற்றுப் பதிவின் சரிதம்
வாழ்வின் வரமான பள்ளிச்சாலை
புள்ளிமானைப் போல துள்ளித் திரிந்தகாலம்
துயர் மறந்த தருணம்
பாடம்படிப்பு விளையாட்டு நடனமென
பவனி வந்தகாலம் இனிய பள்ளிப்பருவம் !

காலத்தைமுந்தி ஓடியகனவுகள்
வெற்றியின் இலக்கினைத் தேடியநாட்கள்
வெற்றிக்கான பயிற்சியின் காலமது
புலரும் பொழுதினில் புன்னகைசிந்தி
மலரும் நினைவுகள் அரும்பிய பருவம்
மனதை நிறைத்த மகிழ்வின் பயணம்
பள்ளியென்ற பொக்கிஷக்காலம் !

பன்னிரெண்டு ஆண்டுப் பயணம்
கண்ணிரெண்டில் ஆடுதே இன்னும் நிழலாக
படித்தபள்ளியில் எனைப்படிப்பித்த ஆசான்களோடு
பாடம் படிப்பித்தகாலம் பொற்காலமே
என்வாழ்வின் பொற்காலமே !