ஐநூறின் ஆற்றுகையில்…

வசந்தா ஜெகதீசன்
திறந்தவெளித் தளத்திலே
திறமைகளின் சங்கமம்
பொன்மாலைப் பொழுதாகி
பூத்திருந்த பொற்காலம்
இயற்கை நிலப் பசுமையிலே
இங்கிதமாய் பல நிகழ்வு
கொஞ்சு மொழிக் குதூகலத்தில்
கொண்டாட்ட மகிழ்வு
அழகிய மலர்களின் இசை குழு வின் தொடக்கம்
உருவாக்கத்திறனுக்கு உரமிடும்
விளக்கம்
ஐநூறின் தொடுகைக்கு அரணான ஆரம்பம்
ஐரோப்பிய அரங்காகி மிளிர்கின்ற மிடுக்கு
ஆங்காங்கே கலைஞர்களை
மிளிர வைக்கும் நிகழ்வு
தொடராண்டின் சரிதமாய்
துலங்கிடுதே அரங்கு
பாமுகமாய் பாரெங்கும்
ஒளிமுகத்தின் ஒளிர்வு
பணியோடு தொடர்கின்ற ஐக்கியத்தின் இணைவு
பாரெங்கும் பல்திறனின் வித்தகமே புதிது!
சாலவும் சிறப்பிங்கு சந்தித்த மகிழ்வு
கலைஞர்குழாம் இடைவிடாது
இணைந்திருந்த பொழுது!
நன்றி

நன்றி

பலவாகும்

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் மார்கழியில் தொங்கிய திங்கள் ஊர் கழிப்பில் தங்கிய சந்திரன் சொந்தக்காரப் பங்கழிப்பன்றோ சிறுவரில் தூங்க அம்புலிமாமியே சிவப்பு...

Continue reading